இலங்கை
13ம்திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டது! சுகாதார அமைச்சர்
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை ஜனாதிபதியின் பேச்சாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
அத்தோடு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.