இலங்கை
எதிர்வரும் 16ம் திகதி முதல் முக்கிய சட்டம் அமுல்!
தொற்றாளர் எண்ணிக்கை தினமும் அதிகரிப்பதால், சுகாதார விதிகளை சட்டமாக்கும் வர்த்தமானியை வரும் 16ம் வௌியிட உள்ளதாவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
அத்தோடு, இந்தியாவிடம் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம் எடுத்துள்ளது.
கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்தியாவிடம் இருந்து ஒக்சிஜன் கொள்வனவு செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு வாரமும் 100 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பமாவதுடன், தேவை பூர்த்தியாகும் வரை கொள்வனவு முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.