இலங்கையாழ்ப்பாணம்
மரணிக்கும் தருவாயில் யாழ் இளைஞன் செய்த நெஞ்சை உருக்கும் செயல்!
யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி மோதியதில் படுகாயமடைந்த இளைஞன் இறக்கப்போகும் நேரத்தில் செய்த செயல் பலரது நெஞ்சினையும் உருக்கியுள்ளது.
மருதனார்மடத்தை சேர்ந்த தங்கராசா – பிரிஞ்சன் எனும் இளைஞன் இறப்பதற்கு சொற்ப நேரத்திற்கு முன் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்தமை பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
குறித்த இளைஞர் வீதியில் மிதிவண்டியில் செல்லும் போது வேகமாக வந்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.
எனினும் உயிருக்குபோராடி கொண்டிருக்கும் போது அவரது சுயவிருப்பத்தின் பேரில் அவர் தனது உறுப்புக்களை யாழ் போதனா வைத்தியசாலை ஊடாக தானமாக வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு இளைஞனின் செயலை பலரும் பாராட்டுகின்றனர்.