ஜனாதிபதி கோத்தபயவுடன் கலந்துரையாடியதை அடுத்து, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான பயணத்தடையினை இன்றோ அல்லது நாளையோ விதிக்கவுள்ளதாக கொழும்புஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய பயணகட்டுப்பாடுகள் குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்பு மற்றும் தினமும் அதிகரிக்கும் மரண எண்ணிக்கையால் நாட்டில் உள்ள சுகாதார அமைப்பு சோர்வடையும் நிலையில் இருப்பதால் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவினை விதிக்க சுகாதார நிபுணர்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
தொற்று நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்காது விட்டால், இறப்பு எண்ணிக்கை ஒருநாளைக்கு 200ஐத் தாண்டும் எனவும் 5000க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்படுவார்கள் எனவும் மருத்துவர்கள் கணித்துள்ளனர்.
டெல்டா வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் சிலநாடுகள், ஊரடங்கை அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.