இலங்கை

உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் தொடர்பில் கோத்தா போட்ட உத்தரவு!

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பகுதியில் கிணறு தோன்றும் போது கண்டு பிடிக்கபட்ட உலகத்தின் மிகபெரிய மாணிக்க கல்லினை சீனாவில் ஏலமிடுவதற்கு திட்டம் இடப்பட்டுள்ளது.

சீனாவில் இடம்பெறும் இரத்தினக்கல் ஏலம் விடும் நிகழ்வில் குறித்த மாணிக்க கல்லை விற்பனை செய்வதற்காக விசேட விமானத்தில் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யுமாறும், பலத்த பாதுகாப்பினை வழங்குமாறும், இதற்கென முழு அரச தலையீட்டை வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் கார்த்திகை மாதத்தில் சீனாவில் நடைபெறும் இரத்தினக்கல் ஏலம் விடும் நிகழ்வில் விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீல மாணிக்க கல்லின் உரிமையாளரது விருப்பத்திற்கு அமைய வெளிநாட்டில் ஏலத்திற்காக கொண்டு செல்லப்பட உள்ளது.

அதிக விலைமதிப்புடைய இந்த மாணிக்க கல்லை இரத்தினபுரியில் இருந்து கொழும்பிற்கு கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதோடு அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார்.

அத்துடன், இந்த மாணிக்க கல் விற்பனை செய்வது குறித்து வெளிநாடுகளில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button