ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த மலையக சிறுமி ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார். இதனை அடுத்து சி.ஐ.டி தடுப்பு காவலில் இருந்த ரிஷாத் பதியுதீன் சுகயீனம் என தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதியாகியிருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதியாகியிருந்த போது ரிஷாத் செய்த வேலை ஒன்றினை பொலிசார் கண்டு பிடித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது இவரது சுகாயீனத்திற்காக வைத்தியர்கள் கொடுத்த மருந்துகளை உட்கொள்ளாமல் கொள்ளாமல், அதனை ஒரு தாளில் சுற்றி கழிப்பறையில் வீசியதாக பொலிஸார் தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரு தாளில் சுற்றப்பட்ட மருந்துகளை ரிஷாத் எம்.பி கழிப்பறை ஜன்னல் வழியாக வீசி எறிந்துள்ளார். ரிஷாத் எறிந்த மருந்துகளை பொலிஸ் அதிகாரிகள் எடுத்து வைத்தியர்களிடம் காட்டி, அவை ரிஷாத்திக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரிஷாத் எம்.பிக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு ரிஷாத் விடுத்த கோரிக்கையினை சி.ஐ.டியினர் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், ரிஷாத் பதியுதீன் நேற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.