நாடாளுமன்றில் தனியாக தவிர்த்த ரணில்!
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியில் முடிந்திருந்தது. இந்நிலையில் அதில் திருத்தம் ஒன்றினை கொண்டு வர ரணில் விக்ரமசிங்ஹ மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதயன்கம்பன்பில இற்கு எதிராக கொண்டுவரபட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை முழு அமைச்சரவைக்கும் எதிராக கொண்டு வரும் யோசனை ஒன்றினை ரணில் விக்ரமசிங்ஹ பாராளுமன்றில் முன்வைத்தார்.
நாடாளுமன்றஉறுப்பினர் ஒருவர் யோசனையை முன்வைக்கும்போது அதனை மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆமோதிக்க வேண்டும்.
இவ்யோசனையை பாராளுமன்றில் எவரும் ஆமோதிக்கவில்லை. இதனால் ரணில் விக்ரமசிங்ஹவின் யோசனையை நிராகரிக்கப்பட்டது.
ரணிலிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களது ஆதரவு இருப்பதாக ஐக்கிய தேசியகட்சி பகிரங்கமாக தெரிவித்திருந்த போதிலும் அப்படியான ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் முன்வரவில்லை என்பது உறுதியானது.