மருத்துவம்

இரவு நேரத்தில் கட்டாயம் உள்ளாடை அணிய வேண்டுமா? விபரம் உள்ளே!

இரவு நேரத்தில் கட்டாயம் உள்ளாடைகளை அணிய வேண்டுமா என்பது பலருக்கு இருக்கும் கேள்விகளில் ஒன்றாகவே இருக்கிறது.

ஆனால் இரவு நேரத்தில் உள்ளாடைகளை அணியாமல் இருப்பது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இறுக்கமான உள் ஆடைகளை அணியும்போது அந்தரங்க பகுதியிலே அரிப்பு, எரிச்சல் ஏற்படுவதனை சந்திக்க நேரிடலாம்.

எனினும் உள்ளாடைகள் அணியாமல் காற்றோட்டமாக இருக்கும் போது உங்களின் அந்தரங்க பகுதியினை சுவாசிக்க இடம் கொடுக்கிறீர்கள்.

ஏனென்றால் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது வியர்வை அதிகமாகி அந்தரங்க பகுதிகளில் பாக்டீரியா பெருகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகிறது.

எனவே உள்ளாடைகளை அணிவதைவிட உள்ளாடைகளை அணியாமல் இருக்கும் போது தொற்று நோய்களின் ஆபத்தை குறைக்க முடியும்.

பிறப்புறுப்பு பகுதியில் உருவாகும் திரவங்கள் உங்களது உள்ளாடைகளில் பட்டு ஒரு விதமான ஈரத்தன்மையை உருவாக்கலாம். இதனால் ஈரமான பகுதியில் பாக்டீரியா பெருக அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த பாக்டீரியா தொற்றே சில நேரங்களில் நோய்களுக்கு வழி வகுக்கும். எனவே தூங்கும் போது உள்ளாடைகளை துறந்து தூங்குங்கள். இதன் மூலம் காற்றோட்டமான சூழல் ஏற்பட்டு பாக்டீரியா தொற்று குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், இரவில் தூங்கும் போது உள்ளாடைகள் இல்லாமல் தூங்குவது நல்ல தூக்கத்தை தருமென அறிவியல் கூறுகிறது. அந்தரங்க பகுதியில் அரிப்பு, எரிச்சல் இருந்தால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது.

எனவே அந்த மாதிரியான சமயங்களில் உள்ளாடைகளை துறந்து காற்றோட்டமாக தூங்குங்கள். இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது நீங்கள் சங்கடமாக உணர நேரிடலாம். அந்தரங்க பகுதியில் ஏற்படும் வியர்வை, உள்ளாடைகள் சருமத்துடன் உராய்வு ஏற்படும் போது எரிச்சல், அரிப்பு ஏற்படும்.

எனவே முடிந்த வரை உள்ளாடை இன்றி இருப்பது இது போன்ற சங்கடங்கள் வராமல் தடுக்கும். இல்லை என்றால் நல்ல காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை தேர்ந்தெடுங்கள்.

அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் முக்கியமான தொற்றுகளில் பூஞ்சை தொற்றும் மிக முக்கியமானது. இறுக்கமான உள்ளாடைகளை அணிவது, அதிகபடியான ஈரப்பதம் உள்ளாடைகளில் இருப்பது, தூய்மையற்ற உள்ளாடைகள் இவற்றால் பூஞ்சை தொற்று ஏற்படலாம்.

இது ஈஸ்ட் தொற்றை ஏற்படுத்தி அரிப்பு, எரிச்சல் மற்றும் பிறப்புறுப்பு துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே உள்ளாடைகள் இல்லாமல் இருப்பது பூஞ்சை தொற்று அபாயத்தை குறைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button