இலங்கைகிளிநொச்சி

வாள்வெட்டு குழு முகமாலையில் அட்டகாசம்!

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் வாள்வெட்டு கும்பல் ஒன்று குடும்பதலைவர் ஒருவரை வெட்டியதில், காயமடைந்தநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தால் கை கால் மற்றும் முதுகு பகுதியில் வெட்டப்பட்டு  காயமடைந்துள்ளார்.

பளை வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதே போல் வீட்டிலிருந்த வாய் பேச முடியாத நிலையிலிருந்த நபருக்கும் அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்த தொலைக்காட்சி அலுமாரி உள்ளிட்ட பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வீட்டின் பிரதான வாயிலில் காணப்பட்ட கதவும் வாலினால் வெட்டப்பட்டுள்ளது.

இது குறித்து விரைந்து செயற்பட்ட முகமாலை இராணுவத்தினர், பொலிஸார் சம்பவஇடத்திற்குச் சென்று நிலைமைகள் குறித்து ஆராய்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button