தாதியர்களது கோரிக்கைக்கு தீர்வு வழங்கினார் ஜனாதிபதி!
அரச தாதியர் சங்கம் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு நாட்களாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளிற்கு உடனடி தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய இரு கோரிக்கைகளிற்கும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
பொது சேவைகள் ஐக்கிய செவிலியர் சங்கத்துடன் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி இம்முடிவுகளை எடுத்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி செவிலியர்களுக்கான பல்கலைக்கழகத்தைத் திறத்தல், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களின் நிலையை மீண்டும் அமுல்படுத்துதல் உட்பட்ட ஐந்து விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் பாதீட்டில், 10,000 ரூபா கொடுப்பனவு உட்பட்ட இரண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.