கிளிநொச்சியில் உள்ள தீவை ஆக்கிரமித்த சீனா!
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பூநகரி, பூவரசன் தீவில் எவ்வித அனுமதியும் இல்லாமல், இலங்கை – சீனா கூட்டு நிறுவனமொன்று கடலட்டை பண்ணையை ஆரம்பித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூவரசன் தீவு என்பது இலங்கைக்கு கிடைத்த அருங்கொடைகளை கொண்டமைந்த ஓர்தீவாகும்.
தமிழர்களின் பகுதியான பூநகரி பிரதேச பிரிவிற்குட்பட்ட இத்தீவில் கடல் அட்டை பண்ணையை மேற்கொள்வதற்கென இங்குள்ள மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போது அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இப்பகுதியில் சீனர்கள் அட்டை குஞ்சுகளை விட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கையில்
இலங்கை – சீன கூட்டு நிறுவனம் எவ்வித அனுமதியும் இல்லாமல் இங்கே அட்டைக் குஞ்சுகளை விட்டு பண்ணையை ஆரம்பித்துள்ளது.
இந்த பகுதியிலே இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் கட்டாயமாக அனுமதி பெற வேண்டும்.
கடந்த ஒருவார காலத்திற்குள் இலங்கை – சீன கூட்டு நிறுவனத்தினால் சட்ட விரோதமாக தொடங்கப்பட்டுள்ளது. எனவு அவ்விடத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்,
தாம் ஒத்திகையை மேற்கொண்டதாக சீனர்கள் கூறினாலும், அதனையும் அனுமதியின்றி செய்ய முடியாது.
அனுமதியின்றி சீனர்களுக்கு கடல் அட்டை வளர்ப்பிற்கு அனுமதி வழங்கியது யார்? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.