இலங்கை

துமிந்தவின் விடுதலையில் அமெரிக்கா அதிருப்தி!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை தொடர்ப்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் டெப்லிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

எனினும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட கருத்தாவது

எனினும், உச்ச நீதிமன்றத்தினால் 2018ம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கான தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் துமிந்தவின் விடுதலையானது சட்டம் ஒழுங்கு, குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், அனைவருக்கும் சட்டம் சமம் என்பது போன்றன மலினப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் ஐக்கிய நாடுகளின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொசோன் பௌர்ணமியை முன்னிட்டு 93 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்.

இதில் 16 புலி சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டதுடன், மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்பட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பிரேமசந்திர படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் துமிந்த சில்வாவிற்கு 2016ம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்று மரண தண்டனை விதித்திருந்தமையை 2018ல்  உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button