இலங்கை
தமிழீழ விடுதலை புலி சந்தேகநபர்கள் 16 பேர் விடுதலை!
ஜனாதிபதியினது பொது மன்னிப்பில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறு குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட 77 கைதிகளும், தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழே விடுதலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
எனினும், ஜனாதிபதியினது பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்களது முழுமையான விபரங்கள் எவையும் இதுவரை சிறைச்சாலை திணைக்களம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.