இலங்கை
உடனடி கடன் வழங்குவதாக மோசடி! மக்களே அவதானம்!
சமூக வலைத்தளங்களின் மூலம் உடனடி கடன் வழங்குவதாக தெரிவித்து பணமோசடி இடம்பெறுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.
பேஸ்புக்கின் மெசென்ஜர், வட்ஸ்சப் போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக பலவிதமாக நிதி மோசடிகள் இடம்பெறுகிறது.
உடனடிகடன் வசதிக்கு இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பித்தவுடன் கடன் வழங்குவதாக தெரிவித்து வாடிக்கையாளர்களது வங்கி கணக்குகளில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுகிறது.
ஆகவே உங்கள் கணக்கு இலக்கத்தை வழங்கிய பின்னர் தொலைபேசிக்கோ அல்லது ஜிமெயிலிற்கோ வங்கியினால் அனுப்பப்படும் உறுதி செய்யும் கடவுச்சொற்களை வேறு யாருக்கும் வழங்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இணையத்தின் ஊடக உடனடி கடன் வசதியை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அதில் தெரிவித்துள்ளது.