சமயம்

விழுமியங்கள் வினா விடை

விழுமியங்கள் என்றால் என்ன?
மனித வாழ்வை மேம்படுத்த உதவும் பெறுமதி மிக்க வாழ்க்கைப் பண்புகளே விழுமியங்கள் எனப்படுகின்றன.

விழுமியங்களைக் கடைப்பிடிப்பதனால் நாம் பெறும் நன்மை யாது?
பிறர் மதிக்கத்தக்க வகையில் உயர்வான வாழ்வை நாம் பெறலாம்

விழுமியங்களைக் குறிப்பிடுக.
மனக்கட்டுப்பாடு
ஈதல்
முதியோரைக் கனம் பண்ணுதல்
மனித உரிமைகளை மதித்து நடத்தல் இயற்கையைப் பேணுதல்
மங்கல வாழ்த்து என்பனவற்றைக் குறிப்பிடலாம்

திரிகரணங்கள் எவை?
மனம், வாக்கு, காயம்

இறைவனை வழிபட மிக முக்கியமான விழுமியம் எது?
மனக்கட்டுப்பாடு

இறைவனை வழிபட மனக்கட்டுப்பாடு அவசியம் என்பதனை சேக்கிழார் எவ்வாறு வலியுறுத்தியுள்ளார்?
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக…” எனக் குறிப்பிட்டுள்ளார்

மனக்கட்டுப்பாடு பற்றி ஆறுமுகநாவலர் குறிப்பிடுவது யாது?
“மனம் பொறிவழிப் போகாது நிற்றற் பொருட்டு….” என்கிறார்.

மனக்கட்டுப்பாடு, இறைவனை வழிபட மட்டுமன்றி வேறு எதற்கு உதவுகின்றது?
கல்வியில் உயரவும் மனக்கட்டுப்பாடு தேவை

ஐம்பொறிகள் எவை?
மெய், வாய், கண், மூக்கு, செவி

மனக்கட்டுப்பாட்டுக்கான சாதனங்கள் எவை?
யோகப்பயிற்சி
மூச்சுப்பயிற்சி
தியானம் போன்றவையாகும்

மனதை ஒருமுகப்படுத்தி குறி தப்பாது அம்பெய்தவன் யார்?
அர்ச்சுனன்

“ஈதல் அறம்” எனக் கூறியவர் யார்?
ஒளவையார்

ஈதல் பற்றி அறநூல்கள் கூறுவன யாது?
தான் எள்ளளவும் பிறரிடம் இரவாது, மற்றையோருக்கு ஈதல் இன்பம் தரும் செயல் ஆகும்.

ஈதல் பற்றி இனியவை நாற்பது கூறுவது யாது?
“எட்டுணையானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்றல் இனிது” என்கிறது.

கொடையில் சிறந்த வள்ளல்களைக் குறிப்பிடுக.
பாரி-முல்லைக்குத் தேர் கொடுத்தான்
பேகன் – மயிலுக்குப் போர்வை கொடுத்தான்
அதியமான் – ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்தவன்
சிபிச்சக்கரவர்த்தி – புறாவுக்காக தன் தசையை வெட்டிக் கொடுத்தவர்

தினமும் ஒரு அடியவர்க்கு உணவளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த நாயனார் யார்?
இளையான்குடி மாறநாயனார்

கொடையில் சிறந்தவன் என மகாபாரதம் போற்றும் வள்ளல் யார்?
கர்ணன்

“ஈவது விலக்கேல்” என்று கூறியவர் யார்? எந்த நூலில் கூறியுள்ளார்?
ஒளவையார்
ஆத்திசூடியில்

முதியோர்கள் எனப்படுவோர் யார்?
வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் மூத்தவர்களே முதியோர்கள் எனப்படுகின்றனர்.

முதியோர்களை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும்?
܀முதியோருக்கு உதவி செய்ய வேண்டும்.
முதியவர்களை இழக்கக்கூடாது
முதியவர்களின் தளர்வு, மறதி, முதுமை போன்றவற்றைப் புரிந்து நடக்க வேண்டும்
முதியவர்களின் அனுபவம், அறிவு, அன்பு என்பன எமக்குத் துணைசெய்யும் என்று அவர்களுடன் மனிதத்துவத்தோடு நடத்தல் வேண்டும்.

இராவணன் நாடகத்தைப் பார்த்துப் பெரிய மகானானவர் யார்?
காந்தியடிகள்

மனிதனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை உரிமைகள் எவை?
உயிர் வாழும் உரிமை
கல்வி கற்கும் உரிமை
எவ்விடத்திலும் வசிக்கும் உரிமை
விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் உரிமை

மனித உரிமை மீறல்கள் எவை?
உயிர்களைக் கொல்வது
உயிர்களைத் துன்புறுத்துவது
கல்வியைப் பெறவேண்டிய வயதில் சிறுவர்களை வேலைக்கு அனுப்புதல்

சமய உரிமை மீறல்கள் எவை?
ஒருவரைக் கட்டாயப்படுத்தி சமயம் மாற்றுவது
சமய அடையாளச் சின்னங்களை அணிய விடாது தடுப்பது

மற்றவர்களது உரிமைகளை மதிப்பதனால் ஏற்படும் நன்மைகள் எவை?
சமாதானம் பிறக்கும்
சாந்தி நிலவும்
குறுகிய மனப்பான்மை விடுபடும்
அனைவரையும் அன்புடன் மதிக்கத் தோன்றும்
அன்புள்ள வாழ்க்கை மலரும்

சைவசமயம் இயற்கை பற்றிக் கூறும் விடயம் யாது?
மனிதன் இயற்கையோடு இயைந்து வாழவேண்டும்
இயற்கையைச் சீற்றங்கொள்ளச் செய்யும் செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

இயற்கையைத் தெய்வமாக மதித்தவர்கள் யார்?
வேதகால மக்கள்

இன்றும் நாம் வழிபடும் இயற்கைச் சக்திகள் எவை?
வருணன், அக்கினி வாயு, சூரியன்

பஞ்ச பூதங்கள் எவை?
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்

இயற்கையைப் போற்றும் செயற்பாடுகள் எவை?
வீட்டுத்தோட்டம் அமைத்தல்
பூந்தோட்டம் அமைத்தல்
மரம் நாட்டல்பேது
நீர் நிலைகளைப் பேணுதல்

“வான்முகில் வழாது பெய்க!…” என யாரால்? எந்நூலில் கூறப்பட்டுள்ளது?
கச்சியப்பசிவாச்சாரியரால்
கந்தபுராணத்தில்

“…மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” எனக் கூறியவர் யார்? எந்நூலில் கூறப்படுகிறது?
கச்சியப்பசிவாச்சாரியரால்
கந்தபுராணத்தில்

திருமுறைகளில் மங்கள வாழ்த்துப் பாடியபின் சொல்லவேண்டியவை எவை?
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! என்று மும்முறை நீதி, எமக்காகவும் சுற்றத்தவர்களுக்காகவும் பிற உயிர்களுக்காகவும் மங்களம் வேண்டுதல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button