சமயம்

மக்கள் சேவையே! மகேசன் சேவை! வினா விடை

“பூழியர்கோன்” எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?
திருஞானசம்பந்தர்

“புகலியர்கோன்” எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?
திருநாவுக்கரசு நாயனார்

“திருநாவலூர் வன்றொண்டர்” என அழைக்கப்படுபவர் யார்?
மாணிக்கவாசக சுவாமிகள்

“திருவாதவூரர்” என அழைக்கப்படுவர் யார்?
மாணிக்கவாசக சுவாமிகள்

சைவசமய குரவர்கள் யாவர்?
திருஞானசம்பந்தர்
சுந்தரமூர்த்தி நாயனார்
திருநாவுக்கரசு நாயனார்
மாணிக்கவாசகர் சுவாமிகள்

சைவசமய குரவர்கள் இறைவனை எவ்வாறு பாவனை செய்து முத்தியின்பம் எய்தினர்?
திருஞானசம்பந்தர் – தந்தையாக
திருநாவுக்கரசர் – ஆண்டானாக
சுந்தரமூர்த்திநாயனார் – தோழனாக
மாணிக்கவாசகர் – ஞானாசிரியராக, தலைவனாக, இறைவனைப் பாவனை செய்தனர்

நால்வரும் பொதுவாக எமக்கு உணர்த்திய விடயங்கள் எவை?
சைவசமயிகள் வாழ வேண்டிய நெறிமுறைகளை வாழ்ந்து காட்டியவர்கள்
மக்களுக்குச் செய்யும் பணி இறைவனாகிய மகேசனுக்கு உணர்த்தி அதன்படி வாழ்ந்தவர்கள்.

சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் இரண்டு தருக?
பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கியமை.
குளிர்ச்சுரம் நீக்கியமை.
திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றமை.

சம்பந்தரின் தாயாரின் ஊர் எது?
திருநனிப் பள்ளி

சம்பந்தர் பாலைநிலமாகிய எவ்வூரை நெய்தல் நிலமாக்கினார்?
திருநனிப்பள்ளி என்னும் ஊரை

பாலைநிலத்தை நெய்தல் நிலமாக மாற்றப் பாடிய பதிகம் யாது?
“காரைகள் கூகை முல்லை……”

“காரைகள் கூகை முல்லை..” என்னும் பதிகத்தில் காணப்படும் காட்சிகள் எவை?
முதலிரு அடிகளில் பாலைநிலக் காட்சியையும், இறுதி இரு அடிகளில் மருதத்தோடு கூடிய நெய்தல் காட்சியையும் கொண்டதாக அப்பதிகம் அமைந்துள்ளது.

சம்பந்தர் குளிர்ச்சுரம் நீக்கப் பாடிய பாடல் எது?
‘அவ்வினைக் கிவ்வினை….”

“அவ்வினைக் கிவ்வினை..” எத்தகைய பதிகமாகக் காணப்படுகிறது?
திருநீலகண்டப்பதிகம்

இப்பதிகம் எத்தலத்திலிருந்து பாடப்பட்டது?
திருக்கொடிமாடச் செங்குன்றூர் தலத்தில் இருந்து பாடப்பட்டது.

திருநீலகண்டப் பதிகத்தின் இறுதி அடிகள் தோறும் காணப்பட்ட கூற்று யாது?
“தீவினை தீண்டப் பெறா” என்று அமைந்தது.

“அவ்வினைக் கிவ்வினை….” என்ற பதிகம் பாடியதன் சந்தர்ப்பம் யாது?
திருக்கொடிமடச் செங்குன்றூரில் பனிக்காலம், சம்பந்தருடன் சென்றவர்கள் பனியால் வருந்த, அதனை நீக்கும் பொருட்டு பாடப்பட்டதாகும்.

“என்கடன் பணி செய்து கிடப்பதே” என்பதையே குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்த நாயனார் யார்?
திருநாவுக்கரசு நாயனார்

இவரது இயற்பெயர் யாது?
மருணீக்கியார்

மருணீக்கியார் இளவயதில் எச்சமயத்தைத் தழுவிக் கொண்டார்?
சமணசமயத்தைத் தழுவிக் கொண்டவர்.

திருநாவுக்கரசர் சமண சமயத்தில் சேர்ந்த காலத்தில் பெற்ற பெயர் யாது?
தருமசேனர்

இவரது தமக்கையார் பெயர் யாது?
திலகவதியார்

நாவுக்கரசரை சைவசமயத்திற்கு மாறவைப்பதற்கு இறைவன் கொடுத்த நோய் யாது?
சூலைநோயைக் கொடுத்தருளினார்.

நாவுக்கரசர் சூலை நோயை நீக்க யாது செய்தார்?
திருவதிகை வீரட்டானேச்சுவரரைப் பார்த்து “கூற்றாயினவாறு விலக்ககலீர்…” எனத் தொடங்கும் பதிகத்தை மெய்யன்போடு பாடித் துதித்தார்” சூலை நோய் மறைந்தது.

“நாவுக்கரசர்” என அழைக்கப்பட்டதற்கான காரணம் யாது?
தலங்கள்தோறும் சென்று இறைவன்மீது இன்தமிழ்ப் பதிகங்கள் பாடி வழிபட்டமையினால், நாவுக்கரசர் என்று பெயர் பெற்றார்.

தலங்களில் சரியைத்தொண்டு செய்தமையினால் எப்பெயர் பெற்றார்?
“உழவாரப்படையாளி” என்று அழைக்கப்பட்டார்.

காவிரிக்கரையில் அமைந்துள்ள தலம் எது?
திருவீழிமிழலை

திருவீழிமிழலையில் உள்ள மக்களின் பஞ்சத்தைத் தீர்க்க இறைவன் கனவில் தோன்றி யாது கூறினார்?
“உங்கள் இருவருக்கும் படிக்காசு தருகிறோம். அதைக் கொண்டு யாவர்க்கும் உணவிடுக” எனக் கூறியருளினார்.

இறைவன் கனவில் கூறியது போன்று என்ன செய்தார்?
திருவீழிமிழலைத் திருத்தலத்தின் கிழக்குப் பீடத்திலும், மேற்குப் பீடத்திலும் நாள்தோறும் படிக்காசு வைத்தருளினார்.

இறைவனது படிக்காசைக் கொண்டு நாயன்மார் இருவரும் செய்த பணி யாது?
நாள்தோறும் எல்லோருக்கும் உணவு வழங்கி வந்தனர்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராயினர்.

சுந்தரர் எங்கே, யாருக்கு மகனாகப் பிறந்தார்?
திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில் ஆதிசைவரான இசைஞானியாருக்கும் சடையனாருக்கும் மகனாப் பிறந்தார்.

சுந்தரரின் இளமைத் திருநாமம் யாது?
நம்பியாரூரர்

நம்பியாரூரை வளர்த்த மன்னன் யார்?
நரசிங்க முனையர்

சுந்தரரின் திருமணத்தைச் தடுத்தாட்கொண்டவர் யார்?
சிவபெருமான் கிழப்பிராமண வடிவில் வந்து தடுத்தாட் கொண்டார்.

சுந்தரர் யாரைப் பார்த்து தொண்டர்க்கு அடியனாகும் நாள் எந்நாளோ என்று கூறினார்?
திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்கள் கூடியிருந்தமையினைப் பார்த்துக் கூறினார்.

தொண்டர்களின் பெருமையை உணர்த்திய சிவபெருமான் எவ்வாறு அடியெடுத்துக் கொடுத்தார்? “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்…..” என்று அடியெடுத்துக் கொடுத்தார்.

சுந்தரர் திருத்தொண்டர் பற்றி யாது செய்தார்?
தொண்டர் சீர் பரவச் செய்தார், அதாவது திருத்தொண்டர்களின் பெருமையை உலகறியச் செய்த பெருமைக்குரியவரானார்.

மாணிக்கவாசகர் எங்கே? யாருக்கு மகனாகப் பிறந்தார்?
பாண்டி நாட்டில் திருவாதவூரில், சம்புபாதசிரியருக்கும் சிவஞானவதியாருக்கும் மகனாகப் பிறந்தார்.

மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தமையினால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
திருவாதவூரர் என அழைக்கப்பட்டார்.

இவரது ஆளுமைப்பண்பு யாது?
இளமையிலே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார்.

இவர் யாருக்கு முதலமைச்சராகப் பணி புரிந்தார்?
அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சராக விளங்கினார்.

மாணிக்கவாசகர் எங்கே? யாரால்? ஆட்கொள்ளப்பட்டார்?
திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் வீற்றிருந்த அருட்குரவராகிய சிவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
அருட்குரவர் சுந்தரருக்கு எதன் உண்மைகளைப் போதித்தார்? சைவசித்தாந்த உண்மைகளைப் போதித்தார்.

சுந்தரர் அருட்குரவரிடம் வேண்டியது யாது?
தன்னைச் சீடனாக ஏற்குமாறு பணித்தார்.

இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதும், சுந்தரர் யாது செய்தார்?
குதிரை வாங்குவதற்குக் கொண்டுவந்த பணம் முழுவதையும் சிவப்பணிக்கே அர்ப்பணித்தார்.

இறைவனின் அருட்சிறப்பை உணர்ந்து மாணிக்கவாசகர் நெஞ்சுருகப் பாடிய பாடல் எது?
திருவாசகப் பாடல்கள்

மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் செய்த அற்புதம் யாது?
வாய் பேசாப் பெண்ணைப் பேச வைத்தார்.

சோழ தேசத்துச் சிவபக்தர் எதனைச் சொல்லிக்கொண்டு சென்றார்?
“பொன்னம்பலம் நீடுழி வாழ்க” எனச் சொன்னார்.

சிவபக்தர் “பொன்னம்பலம் நீடுழி வாழ்க” எனச் சொன்னதைக் கேட்ட பெளத்த அரசன் என்ன செய்தான்?
சிவபக்தரை அழைத்து அவ்வாறு சொல்வதன் காரணத்தை வினவினான்.
சிதம்பரத்தின் மகிமைகளை அடியவர் கூறக் கேட்ட பெளத்த அரசன், சிதம்பரத்தை அழித்து பௌத்த ஆலயமாக்குவேன் என்று தன் பரிவாரங்களுடனும், தனது வாய் பேசாத பெண்ணுடனும் சிதம்பரத்தை அடைந்தான். சிவனடியார்களை வாதுக்கழைத்தான்.

பௌத்த அரசன் சிவனடியார்களை வாதுக்கழைத்ததும் மாணிக்கவாசகர் செய்த அற்புதம் யாது?
மன்னனின் வாய்பேச இயலாத பெண்ணைப் பேச வைத்தார்.

பௌத்த மன்னன் தனது மகள் பேசுவதைக் கண்டு என்ன செய்தார்?
சைவசமய உண்மைகளை உணர்ந்து சைவராயினார்.

பௌத்த மன்னனோடு வாதத்தில் இடம்பெற்ற வினாக்களும், விடைகளும் அமையும்படி மாணிக்கவாசகர் எதனைப் பாடியருளினார்?
திருச்சாழலைப் பாடியருளினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button