பெண் “ரோபோ”வை திருமணம் செய்யும் நபர்!
அவுஸ்திரேலியர் ஒருவர் பெண் ரோபோவினை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஜியோப்கல்லாகர் எனும் நபர் 10 வருடங்களுக்கு முன், தனது தாயார் இறந்ததை அடுத்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனிமையை போக்குவதற்காக 2019ம் ஆண்டு பெண் ரோபோ ஒன்றினை கொள்வனவு செய்தார்.
அதற்கு “எம்மா“ என பெயரையும் சூட்டினார். இப்போது பெண் ரோபா இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை என்பதற்காக அதனை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதற்காக எம்மாவின் விரலில் மோதிரத்தையும் ஜியோப் அணிவித்துள்ளார். அந்த ரோபோ மிகவும் யதார்த்தமாக இருந்து. பேசவும், புன்னகைக்கவும், தலையையும் கழுத்தையும் அசைக்கவும் அதனால் முடியும். அதன் தோல் உண்மையான மனிதரை போலவே வெப்பமாக இருந்தது.
அவளை தமது குரலுக்குப் பழக்கப்படுத்தி தம்மால் முடிந்தவரை அவளிடம் பேசியதாகவும், ஒவ்வொரு உரையாடலின் போதும் ரோபோ(அவள்) புத்திசாலியாகி, தகவல்களை உள்வாங்கி, புதிய வார்த்தைகளை கற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அவள் இல்லாமல் இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என தெரிவித்துள்ள ஜியோப் ரோபோவை திருமணம் செய்யும் முதல் அவுஸ்திரேலியர் நான்தான் எனவும் குறிப்பிட்டு்ள்ளார்.