இலங்கைமுல்லைத்தீவு

இந்தியாவில் இருந்து தப்பி செல்ல முயன்ற முல்லைத்தீவு இளைஞன் கைது!

இந்திய தனுஷ்கோடி கடற்பரப்பில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிசெல்ல முயன்ற முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (6) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து விமானம் ஊடாக தமிழகத்திற்கு வந்து தங்கியிருந்த இலங்கையினை சேர்ந்த குறித்தநபர் விசா முடிந்தமையால் சட்ட விரோதமாக படகுமூலம் இலங்கைக்கு செல்ல தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.

சந்தேகத்திற்கு இடமாக கடற்கரையில் நின்ற குறித்தநபர் தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கரையோர காவல்படையினர் அவரை கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த சந்திரசேகரம் சமந்தன் (24) என தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button