இலங்கைகிளிநொச்சி

கிளிநொச்சியில் 24 வயது இளைஞன் வெட்டிக்கொலை!

புத்தாண்டு தினமான நேற்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது 24வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் பரந்தன் சந்திக்கு அருகில் நடைபெற்றுள்ளது.

இதன் போது பரந்தன் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய கார்திக் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதோடு, அவரின் அக்காவின் மகன் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்திக்கை நான்கு பேர் கொண்ட குழுவினர் தலைக் கவசத்தால் தாக்கி கொண்டிருந்த போது அதனை தடுப்பதற்காக சென்ற தன்னை அவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டியதனால் காயம் அடைந்தாகவும், பின் அவர்கள் கார்திக்கையும் வெட்டி கொலை செய்ததாகவும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button