இலங்கை
இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!
இலங்கையின் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இவ் விடயத்தினை மத்திய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 6.2 சதவீதமாக இருந்த பணவீக்கமானது இப்பொழுது 2.1 அதிகரித்து கடந்த ஒக்டோபர் மாதத்தில் 8.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையானது உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களது விலை உயர்வு காரணமாக இவை நடைபெற்றதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவு பொருட்களின் விலை 0.83 சதவீதமும், உணவு அல்லாத பொருட்களது விலை 1.23 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மதத்தினை விட தற்போது பண வீக்கமானது அதிகரிப்பு ஏற்படுவதற்கு நாட்டில் ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே காரணமென கூறப்படுகிறது.