இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கும் புலிகளுக்கும் தொடர்பு! நாடாளுமன்றில் பரபரப்புத் தகவல்!

அரச தரப்பினர், ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதற்காக திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபையில் நேற்றுத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஆளுந்தரப்பு உறுப்பினரும் கோபா குழு தலைவரு மான கலாநிதி திஸ்ஸ விதாரண முன் வைத்த அரச கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்தி வைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் நடந்த சில தினங்க ளுக்கு முன்னர்வனாத்தவில் பகுதியில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட வேளையில், அவர்களை கொலை செய்தது யார் என ஆராய முயற்சித்த போது அதனை விடுதலை புலிகளின் மேல் சுமத்தினர்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கியமான 42 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு நெருக்கடி, பிணைமுறி ஊழல் என்பவற்றைக்கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மத்திய வங்கி ஊழல்வாதிகளையோ அல்லது ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளையோ பிடிக்க முடியவில்லை .

ஈஸ்டர் தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியும் அதற்குப் பதில் தெரிவிக்கவில்லை.

பொதுமக்கள் ஜனாதிபதியிடமும் பாதுகாப்பு அமைச்சரிடமும் கேள்வி எழுப்பியும் அவர்கள் உறுதியான பதில் கூறவில்லை .

ஷாரா என்ற பெண் எங்கே? என நாம் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அவரது மரபணுவை பெற்றுக் கொண்டு அவர் இறந்து விட்டார் என நிரூபிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஷாரா என்ற பெண் இன்றும் இராணுவ முகாமில் உள்ளாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவுக்கு தப்பிச் செல்ல விட்டீர்களா? என்ற உண்மையை எமக்கு தெரிவிக்க வேண்டும்.

ஏன் அரசாங்கம் இவற்றை மூடி மறைக்கின்றது? அது மட்டுமல்ல, சஹ்ரானின் மனைவியின் வாக்கு மூலத்தில் உள்ள தகவல்களை ஏன் வெளிப்படுத்த வில்லை? அவரது வீட்டுக்கு சென்ற புலனாய்வு அதிகாரி யார்? உண்மைகள் வெளி வந்துவிடும் என்ற அச்சத்தில் சகலரும் அச்சமடைகின்ற னர்.

தேசிய பாதுகாப்பு நெருக்கடிகளை தீர்க்க ஆட்சிக்கு வந்தவர்கள் உண்மை யில் என்ன நடந்தது என கூறுங்கள். இது குறித்து கேள்வி எழுப்பும் வேளையில் எம்மை அடக்காது உண்மை என்ன என்பதை கூறவேண்டும் என்று மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button