இலங்கை

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு முன்னுரிமை!

நாட்டில் காற்று மாசுபாடினை குறைக்கும் நோக்கத்தில் மின்சார கார்களினை இறக்குமதி செய்ய அரசாங்கம் முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்று சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர் வருகின்ற காலத்தில் மின்சார வாகனங்களினை இறக்குமதி செய்ய  அரசு முன்னுரிமை வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும் பசுமை பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் இராஜாங்க அமைச்சரவை கூட்டத்தின் போதே மஹிந்த அமரவீர இதனை கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“இதற்காக அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார பேருந்துகளை பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.

தற்போது, தனியார் துறை பல்வேறு இடங்களில் சுமார் 400 மின்னேற்றும் நிலையங்க நிலையங்களை அமைத்துள்ளது. மேலும் அந்த எண்ணிக்கையை மேலும் 350 அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

தற்போது ஒரு முறை சார்ஜ் செய்த வாகனமொன்று பயணிக்கக்கூடிய ஆகக்கூடிய தூரம் 300-350 கிலோமீற்றர் ஆகும் எனஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button