சினிமா

மகா சமுத்திரம் படம் வெளி வரவுள்ள நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை!

தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள மகா சமுத்திரம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சித்தார்த், அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் நடிப்பில் தற்போது மகா சமுத்திரம் படம் உருவாகி வருகிறது. இதில் தெலுங்கு நடிகர் சர்வானந்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகா சமுத்திரம் படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி திரைக்கு வருகிறது.

இந் நிலையில், மகா சமுத்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து மகா சமுத்திரம் படத்தின் இயக்குனரான அஜய் பூபதி கூறுகையில், நடிகர் சித்தார்த் அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும், அதன் காரணமாகத் தான் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் எதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button