இலங்கையாழ்ப்பாணம்

கொடிகாமத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு!

யாழ். கொடிகாமம், குடமியன் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டுகள் இரண்டு இன்று (16) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாழடைந்த காணி ஒன்றிற்கு அருகில் அமைந்துள்ள குளத்துடன் உள்ள பற்றையில் இருந்து குறித்த வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமகன் ஒருவன் வழங்கிய தகவலுக்கமைய குறித்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

15 கிலோ கிராம் மற்றும் 10 கிலோ கிராம் நிறையைக் கொண்ட வெடி குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button