சினிமா

கார்பமானார் நடிகை காஜல் அகர்வால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஆன காஜல் அகர்வால் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்த ஆண்டு காஜல் காதல் திருமணம் செய்திருந்தார்.

எனினும் திருமணத்திற்கு பின்பும்கூட படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கருங்காப்பியம், கோஷ்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் கோஸ்ட் படங்களில் நடிக்கிறார். கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாகி உள்ளது.

கணவர் விரும்பினால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் என முன்னர் கூறி இருந்தார். இந் நிலையில் 36 வயதாகும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது சினிமாவில் இருந்து தற்காலிக காஜல் அகர்வால் ஓய்வு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button