நாளை புதன்கிழமை தொடக்கம் மன்னாரில் உள்ள சோதனை சாவடிகளில் தடுப்பூசியை பெற்று கொண்ட அட்டையினை பரிசோதிப்பதற்கு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தடுப்பூசியினை பெறாதவர்களுக்கு அன்ரிஜன் அல்லது பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
30 வயதிற்கு அதிகமானோருக்கு தடுப்பூசியினை செலுத்தும் வேலைத் திட்டமானது மன்னார் மாவட்டத்தில் முடிவுக்கு வருவதாகவும் 71396 பேர் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளதோடு 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்தோடு 20 தொடக்கம் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.