கர்ப்பமாவதை ஒரு வருடம் தவிருங்கள்! சுகாதார பிரிவினர் எச்சரிக்கை!
இலங்கையில் தற்பொழுது கொரோனா வைரஸின் டெல்டா வகை திரிபு பரவுவதனால் ஒரு வருடத்திற்கு கரப்பமாவதனை பெண்கள் ஒரு வருடத்திற்கு தாமதபடுத்துவது சிறந்தது என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் மகளிர் மருத்துவ நிபுணர் வைத்தியர் ஹர்ஷ அத்தப்பத்து இதனை தெரிவித்தார்.
டெல்டா மாறுபாடு பரவுவதால், தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது எனவும் முடிந்தால், ஒரு வருடத்திற்கு கர்ப்பத்தை தாமதப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கர்ப்ப காலத்தின் இறுதி மூன்று மாதங்கள் மற்றும் பிறப்பில் கொரோனா தொற்றுக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது சில நேரங்களில் முதல் மூன்று மாதங்களின் போது மிக தீவிரமான தொற்று காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.