நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படும் விடையத்தில் எவ்விதமான உண்மை தன்மையும் இல்லை என அமைச்சர் ஜிஎல் பீரிஸ் கூறியுள்ளார்.
பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் சில வர்த்தகர்களினாலேயே போலியான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்பொழுது அரசு மிகவும் கடினமான ஒரு கால கட்டத்தினை கடந்து பயணிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
கொவிட் பரவலால் ஏற்பட்ட நெருக்கடிகளை அரசு வெற்றிகரமான முறையில் எதிர்கொண்டு வருகிறது எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.