அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை!

வைத்தியசாலைகளில் உள்ள அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் அவற்றின்  உச்ச மட்ட கொள்திறைனை எட்டியுள்ளதாக சுகாதார பிரிவினர்  தெரிவிக்கின்றனர்.

தினமும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, சுகாதார வழிமுறைகளை உரியமுறையில் பின்பற்ற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு வைத்தியசாலைகளில் மனிதவள பற்றாக்குறை  காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தினமும் சுமார் 4000 நோயாளர்கள் பதிவாவதுடன், 200-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாவதாகவும் அவர் கூறினார்.

இதனால் கொரோனா தொற்றுநிலை தொடர்ந்தும் அபாயகரமானதாகவே காணப்படுவதாக சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இப்பொழுது நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வே அதிகளவில் பரவி வருகிறது.

Exit mobile version