அமெரிக்க டொலர் 226 ரூபாவுக்கு விற்பனை!

அமெரிக்க டொலர் ஒன்றின் உண்மையான பெறுமதி தொடர்பான விடயம் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த செவ்வாய்க்கிழமை 204.89 ரூபாவாக பதிவானதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எனினும் புதன்கிழமை வர்த்தக வங்கிகளின் பலவற்றின் நாணய மாற்று வீதத்திற்கமைய அரச வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனை விலை சிறிய சரிவை சந்தித்த நிலையில் தனியார் வங்கிகளின் விற்பனை விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதற்கமைய இலங்கை வரலாற்றில் முதல் முறையாக டொலர் ஒன்றின் விற்பனை விலை 226 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை வங்கியின் டொலர் விற்பனை விலை 203 ரூபாவாக பதிவான நிலையில் மக்கள் வங்கி 204.99 ரூபாவாக பதிவு செய்துள்ளது.

எப்படியிருப்பினும் கொமர்rல் வங்கி 226 ரூபாவாகவும், சம்பத் வங்கி 226.25 ரூபாவாகவும், ஹற்றன் நெrனல் வங்கி 226 ரூபாவாகவும் செலான் வங்கி 225 ரூபாவாகவும் பதிவு செய்துள்ளது.

Exit mobile version