திருமணம் செய்யாமல் குழந்தை பிரசவித்த பெண்! பெற்றோர் செய்த செயல்!

நுவரெலியாவில் வீடொன்றிற்கு அருகே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுது.

மாவட்ட நீதவான் லூசகா குமாரியின் முன்னிலையில் சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டு குறை பிரசவத்தில் குழந்தையினை பிரசவித்த 25 வயதுடைய திருமணம் செய்யாத யுவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தெரியவருவதவது,

நுவரெலியாவின் கெலேகால லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த 25 வயதுடைய யுவதி, திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் அடைந்துவிட்டார்.

இதனை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார், யுவதியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து பெற்றோர் விசாரனை செய்தனர். இதன்போது யுவதி நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கின்றமை தெரியவந்தது.

இதனை அடுத்து பெற்றோர் கட்டாயபடுத்தியமையினால் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டு கருக்கலைப்பினை செய்தனர்.

இதன்போது 6 மாதமே ஆன சிசு இறந்த நிலையில் பிரசவமானது. இறந்த நிலையில் பிரசவமான சிசுவை வீட்டுக்கு அருகில் உள்ள மின்கம்பம் ஒன்றின் அடியில் புதைத்தனர்.

சிசுவை பிரசவித்த யுவதிக்கு இரத்த போக்கு அதிகரித்தமையினால், அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த வைத்தியர்கள் குறித்த 25வயது யுவதியிடம் வினவின போது இச்சம்பவம் தெரியவந்தது.

இது குறித்து வைத்தியசாலை பொலிசாரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, யுவதியின் வாக்கு மூலத்தை பெற்ற பின் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற அனுமதியுன்ட, நேற்று சடலத்தை தோண்டி எடுத்தனர்.

இரத்த கறை படிந்த துணி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதது. அத்தோடு யுவதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version