சினிமா

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மூன்று நடிகைகள்!

விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் இப்பொழுது காரைக்குடியில் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது.

நடிகர் கமலிற்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஷிவானி, மைனா நந்தினி, மகேஷ்வரி

இந்நிலையில், இப்படத்தில் ஷிவானி, மைனா நந்தினி, மகேஷ்வரி ஆகியோர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button