இலங்கையில் அவசர சிகிச்சை பிரிவுகளில் பல தொற்றாளர்கள்!

அவசர சிகிச்சை பகுதியில் பல கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்சிஜன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு 188 கொரோனா தொற்றாளரகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களுக்கென அரச தனியார் வைத்தியசாலைகளில் 39,160 கட்டில்கள் காணப்படுகின்றன. இதில் தற்போது 34,800 கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது.

அத்தோடு 14,154 கொரோனா தொற்றாளர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு ஏனைய நோய்களினால் பாதிப்புக்குள்ளான 40,353 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

அனைத்து தனியார் ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க அரசு உத்தரவு!

Exit mobile version