ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேறியது அமெரிக்கப்படை!

கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தினர் இன்று அதிகாலை உடன் முற்றுமுழுதாக வெளியேறுகின்றனர்.

இது தொடர்பில் நேற்றைய தினம் அமெரிக்க மக்களுக்கு அதிபர் ஜோ பைடன் விசேட உரையினை ஆற்றினார்.

அந்த உரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் விமான போக்குவரத்தினை கடந்த 14 நாட்களில் இயக்கி, அமெரிக்க குடிமக்கள் எங்கள் நட்பு நாடுகளின் குடிமக்கள் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிய நண்பர்கள் என ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை வெளியேற்றியுள்ளோம்.

ஆப்கானிஸ்தானில் எங்களின் 20 வருட இராணுவ இருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. அங்கிருக்கும் எமது ராணுவ படைகள் ஆகஸ்ட் 31 அதிகாலை முற்று முழுதாக வெளியேறுகின்றனர்.

ஆப்கானை விட்டு வெளியேற விரும்புகின்ற அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பான வலியுறுத்துவதனை உறுதி செய்வதற்கு எமது நட்பு நாடுகளை ஒன்றிணைத்து அதற்கு தலைமை வகிக்குமாறு நான் வெளியுறவு செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

அத்தோடு நாளை பிற்பகல் தொடக்கம் எமது இருப்பை ஆப்கானில் நீட்டிக்க கூடாது எனும் முடிவை மக்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

தலிபான்கள் பாதுகாப்பான பாதையில் பயணிப்பதாக உறுதிமொழிகளை தந்துள்ளனர். அத்தோடு உலக நாடுகள் அவர்கள் செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தும்.

ஆப்கானில் நடைபெற்றுவரும் ராஜதந்திரம் இதில் அடங்கும். ஆப்கானை விட்டு வெளியேற விரும்புவர்களுக்கு விமான நிலையத்தினை திறப்பதற்காக தலிபான்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவோம் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version