ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க ராணுவத்தினர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில் தாக்குதல் நடாத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன்கள் நடாத்திய தாக்குதலில் ஐ எஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முக்கிய மூளையாக இவரே செயற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது
ஆப்கானில் அமைந்துள்ள காபூல் விமான நிலையத்தின் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இதில் 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு 12 அமெரிக்க ராணுவத்தினரும் உயிரிழந்திருந்தனர்
.இந்தத் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில் அமெரிக்க ட்ரோன்கள் தாக்குதலை நடாத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.