கொரோனாவுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த முன்னால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பவுள்ளார்.
அஜித் ரோகனவிடம் தொடர்புகொண்டு உடல் நிலை தொடர்பில் வினவியபோதே அவர் இதனை கூறினார்.
தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக உணரும் முதலாவது சந்தர்ப்பத்தில் இருந்தே சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நான் அதனைச் செய்ததனாலேயே இன்று குணம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இருவாரங்கள் ஓய்வெடுத்த பின் மீளவும் தனது பணிகளை தொடங்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.