தற்பொழுது இலங்கையில் சீனியின் விலை 250 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
சில வாரத்திற்கு முன் 115 ரூபாய் தொடக்கம் 130 ரூபாய் வரையில் விற்கப்பட்ட சீனி தற்போது 210 ரூபாய் தொடக்கம் 230 ரூபாய் வரை விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது சீனி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் நாட்டில் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து சீனி நீக்கப்பட்டமையே அதன் விலை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறு இருப்பினும் சீனியின் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.