இலங்கை
கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 5மாத சிசு கொரோனாவால் பலி!
5மாத சிசு கொரோனாவால் பலி
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவரது வயிற்றினுள் இருந்த ஐந்து மாதமே ஆன சிசு ஒன்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் உண்மையானதுதான் என்பதனை கம்பளை வைத்தியசாலையின் சுகாதாரபிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கம்பளையினை சேர்ந்த குறித்த பெண், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இதன்போது, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றினுள் இருந்த சிசு உயிரிழந்ததை அடுத்து சத்திரசிகிச்சை மூலம் சிசு அகற்றப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
30ம் திகதியின் பின்னரும் நாடு முடக்கப்படுகிறதா? சற்று முன் கிடைத்த செய்தி!