30ம் திகதியின் பின்னரும் நாடு முடக்கப்படுகிறதா? சற்று முன் கிடைத்த செய்தி!

தற்பொழுது நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 30ஆம் தேதியின் பின்பும் நாட்டை தொடர்ந்தும் முடக்குவதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலை வழங்க முடியாது என இலங்கை வைத்திய சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதற்காக பத்து நாட்களுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை தற்போது கூற முடியாது எனவும் சங்க தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே இது தொடர்பில் இறுதி நாட்களில் போதே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா!

Exit mobile version