தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சிலரது ஏற்பாட்டால் அதிருப்தி அடைந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களை கடுமையாக திட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டினை எதிர்வரும் மூன்று வாரத்துக்கு முடக்கி வைக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் கோபம் அடைந்த ஜனாதிபதி தொலைபேசி மூலம் அழைப்பினை எடுத்து விமல் வீரவன்ஸ வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.