தலிபான்களின் உறுதிமொழியால் இலங்கை அரசு மகிழ்வடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய பாரம்பரியங்களை பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலை செய்ய முடியும் எனவும் பெண்கள் பாடசாலைக்கு செல்ல முடியும் எனவும் அளித்த உறுதிமொழியால் இலங்கை அரசாங்கம் மகிழ்வடைவதாக குறித்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாவது
எந்த வெளிநாட்டவருக்கும் தீங்கு விளைவிக்க மாட்டோம் எனவும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான்கள் வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து பேணுமாறு தலிபான்களிடம் கோரிக்கை விடுவதிலும் இலங்கை அரசாங்கம் மகிழ்வடைகிறது.
ஆப்கானிஸ்தானின் சட்டம் மற்றும் ஒழுங்குகளை உறுதிபடுத்துவதோடு ஆப்கானிஸ்தான் மக்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் தலிபான்கள் பாதுகாக்க வேண்டும்.
அத்தோடு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைத்து கட்சி பொறி முறை நிறுவப்படும் என தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்வதாகவும் இலங்கை அரசு குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடையது
இந்தியாவின் எதிரிநாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு!
விடுதலை புலிகளுடன் எமக்கு தொடர்பு இல்லை – தலிபான்கள் அறிவிப்பு!
தலிபான்களிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்! ஐநாவில் இன்று அவசர கூட்டம்!