தாலிபான்களினை எதிர்க்கும் பெண்களது உடல்களை நாய்களுக்கு விருந்தாக கொடுக்கும் கொடூரங்கள் இனிநடைபெறுமென ஆப்கானை சேர்ந்த இளம் தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான் கர்ப்பிணியாக இருந்தபோது தாலிபான்களினால் கொடூர சித்திரவதைக்கு உள்ளாகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானை சேர்ந்த 33 வயதான Khatera எனும் இளம்தாய் தற்போது இந்தியாவின் டெல்லியில் வசித்துவருகிறார்.
தாலிபான்களிற்கு எதிராககுரல் எழுப்பியதால், தனது இரு கண்களையும் இழந்ததாகவும் இதற்கு தாலிபான் ஆதரவாளரும் சொந்த தந்தையுமே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்டாதாகவும் மார்பு மற்றும் வயிற்றுபகுதியில் 8 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக தாம் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
அலுவலகத்தில் வேலை முடித்து வீடு திரும்பிய போது மூன்று தாலிபான்கள் தடுத்து நிறுத்தி எனது அடையாள அட்டையை சோதித்த பின் உடனே துப்பாக்கியால் சுட்டனர். பின் எனது கண்கள் இரண்டையும் அவர்கள் சேதப்படுத்தி விட்டு சென்றனர்.
இச்சம்பவம் நடந்தபோது 2 மாத கர்ப்பிணியாக இருந்தேன். பெண்களை கடத்திசென்று சித்திரவதைக்கு உள்ளாக்கும் தாலிபான்கள், சில நேரம் நாய்களுக்கு உடல்களை உணவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.