குளியாப்பிட்டி பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றிற்குள் வைத்து 15 வது சிறுமியை இருதடவைகள் துஷ்பிரயோகம் செய்த அர்ச்சகரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குளியாப்பிட்டி, போஹிங்கமுவ பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றிற்குள் வைத்து சிறுமியை அர்ச்சகர் துஷ்பிரயோகம் செய்திருந்தார்.
குறித்த ஆலய அர்ச்சகர் மந்திர தந்திர வேலைகளில் பிரபலமாக இருந்தமையால், தானது 15 வயதான மகள் காதலிக்க ஆரம்பித்ததால் கவலை அடைந்த தாயார், அவரது காதல் உறவினை மந்திர, தந்திரங்கள் மூலம் இல்லாமல் செய்வதற்காக ஆலயத்திற்கு அழைத்து சென்றார்.
ஆலயத்திற்குள் வைத்து அர்ச்சகர், சிறுமியை துஷ்பிரயோகம் செய்திருந்தார். இதன் பின் மறுநாளும்
சிறுமியை ஆலயத்திற்கு வரச்சொல்லி 2வது நாளும் துஷ்பிரயோகம் செய்தார்.
இதன்பின் மூன்றாவது நாளும் சிறுமியை வருமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுமி மறுநாள் ஆலயத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனை அடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை அடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரிய வந்தது.
இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அர்ச்சகர் ஆலயத்தை பூட்டி விட்டு தலை மறைவானார்.
பின் அவர் கைது செய்யப்பட்டு, நேற்று முன்தினம் (16) நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதே நீதவான் மேற்சொன்ன உத்தரவை பிறப்பித்தார்.
இச்சம்பவத்தை சாக்காக வைத்து, இந்துக்கள் இல்லாத இடத்தில் இருக்கும் இந்து ஆலயத்தை அகற்றுமாறு பௌத்த பிக்கு தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதோடு ஆலய முன்றலில் புத்த சிலை வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.