இலங்கையிலே உற்பத்தி செய்யப்படுகின்ற ஒட்சிசனின் அளவு எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது என விசேட வைத்திய நிபுனர் ஆனந்தவிஜய விக்ரம தெரிவித்துள்ளார்.
கடந்த 15ம் திகதி இரவு வரையும் அவசர சிகிச்சை பிரிவுகளில் சுமார் 188 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவகின்றனர்.
இவர்களுக்காக மாத்திரம் ஒரு நாளிற்கு ஒரு இலட்சம் ரூபாவினை செலவிட வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்தார்.