இலங்கை

இலங்கை அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!

இப்பொழுது உள்ள அமைச்சரவையின் நான்கு முக்கிய அமைச்சர்கலின் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி,

கல்வி அமைச்சராக இருந்த ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும்,
மின்சக்தி அமைச்சராக இருந்த டளஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும்,
ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சராகவும்,
சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியராச்சி போக்குவரத்து அமைச்சராகவும்,
போக்குவரத்து அமைச்சராக இருந்த காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக இருந்த தினேஸ் குணவர்த்தன கல்வி அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு எனும் விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button