ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதுடன் ஆப்கான் முற்றுமுழுதாக தலிபான்கள் கையில் வீழ்ந்தது.
நேற்றைய தினம் ஆப்கானிஸதானின் அதிபர் மாளிகையும் தலிபான்களால் கைப்பற்றப்பட்டது. விரைவிலே தலிபான்களால் ஆட்சி மாற்றம் இடம்பெறவுள்ளது.
இது குறித்து விவாதிக்க இன்று ஐநாவில் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் விமான நிலையங்களில் தலிபான்கள் நெருங்ககூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல ஆப்கான் மக்கள் விமான நிலையங்களில் நிறைந்துள்ளனர்.
ரத்த களறியை தவிர்ப்பதற்காகவே வெளியேறியதாக ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி உருக்கமாக தெரிவித்திருந்தார்.
ஆப்கானில் இருந்த தமது நாட்டு மக்களையும், தூதரக அதிகாரிகளையும் தனி விமானத்தின் ஊடாக அழைத்து செல்கிறார்கள்.
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டம் நடைபெறுகிறது.
எஸ்டோனியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளது வேண்டுகோளுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபை இக்கூட்டத்தை நடத்துகிறது. இதன்போது ஐநா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு ஆப்கானிஸ்தானின் இப்போதைய நிலை தொடர்பில் விளக்கவுள்ளார்.