நாடு முழுவதும் நாளை(16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அமுலாகும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊரடங்கு சட்டம் ஒவ்வொருநாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நடைமுறையில் இருக்குமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அதேதினத்தில் இரவு 10மணிக்கு மீள அமுல்படுத்தப்படுமெனவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
இந்நடைமுறை மறுஅறிவித்தல் வரை தினமும் இரவுவேளைகளில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகளுக்கு இத்தீர்மானம் தாக்கம் செலுத்தாது எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தினமும் கொரோனா தொற்று தீவிரமாகவும் மிகவேகமாகவும் பரவிவரும் நிலையில்,பல தரப்பினரும் தொடர்ச்சியாக நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்துவரும் நிலையில்,தற்போது தினமும் இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.