கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்! தகவல் வழங்கியவர் கைது!

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வழங்கிய இலங்கை விமானப்படையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாவும் சரத்வீரசேகர தெரிவித்தார்.

விசேட குழு ஒன்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக குறித்த விமானப்படை உறுப்பினர் தூதரகத்தின் 3வது செயலாளரான  பெண் அதிகாரிக்கு தகவல் அனுப்பியமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கிடைத்த தகவலுக்கு அமைய, அவரது தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், அவர் வழங்கிய தகவல் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் சரத்வீரசேக கூறினார்.

விமானப்படை உறுப்பினர் என்பதால், அந்நபர் தேசிய பாதுகாப்பு குறித்து அதிகதௌிவு இருக்க வேண்டும். அத்தகைய தகவல் கிடைத்தாக் அவர் அதனை பொலிஸாருக்கோ இராணுவத்திற்கோ அறிவித்திருக்க வேண்டுமெனவும், இந்தியா திருப்தி அடையும் விதத்தில் விசாரணைகள் நடைபெறும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர உறுதியளித்தார்.

Exit mobile version