இன்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது, 60 வயதிற்கு அதிகமானோர் மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலமாக பீடிக்கபட்டுள்ளவர்கள் குறித்து விசேடகவனம் செலுத்துமாறு கோட்டாபய ராஜபக்ச சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் கொரோனா ஒழிப்பு விசேட சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இது குறித்து ஜனாதிபதி தெரிவிக்கையில்,

கடந்தசில நாட்களாக பதிவாகிய கொரோனா மரணங்களில் பெரும்பாலானவை மேல்மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இவர்களில் அதிகமானவர்கள் 60 வயதிற்கு அதிகமானோர் எனவும், இவர்கள் தடுப்பூசியினை பெற்றுகொள்ளாததோடு மற்றும் தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆகவே, 60 வயதிற்கு அதிகமானோருக்கு தொற்றா நோய்களால் நீண்டகாலம் பீடிக்கப்பட்டவர்கள் குறித்து கவனம் செலுத்தி, விசேட செயற்றிட்டம் ஒன்றினை தயாரிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

PCR மற்றும் Antigen பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.

அத்தோடு சிறுநீரக அறுவ சிகிச்சை அல்லது குருதி சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியது மிகமுக்கியமாகும் என்றார்.

Exit mobile version