நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ள நிலையில் நாட்டினை முடக்குவாதா இல்லை வேறு எதாவது திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதா என்பது குறித்த முக்கிய உயர் மட்ட கூட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது.
தினமும் 2500இற்கு அதிகமான தொற்றாளர்கள் இனம்காணப்படும் நிலையில் மரணங்களும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 150இற்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உட்பட சுகாதார தரப்பினர் பலரும் நாட்டை முடக்குமாறு வலியுறுத்தப்பட்டு வரும்நிலையில் இதற்கு கோத்தபாய ராஜகபக்ச மறுப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுகாதார அமைச்சினது முக்கிய பிரதானிகள் மற்றும் சுகாதார அமைச்சர் உட்பட்ட குழுவினர், ஜனாதிபதியுடன் சந்தித்து நாட்டினது தற்போதைய நிலைமை குறித்து தீர்மானமிக்க கலந்துரையாடலை நேற்றுமாலை நடத்தியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய தீர்மானமொன்று அறிவிக்கப்படுமென பலரினாலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாட்டை முடக்கும் எண்ணம் இல்லைஎன கோத்தபாய தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.